கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே போர் அபாயம் - இராணுவ வீரர்கள் மோதலில் 31 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


சோவியத் யூனியன் ஒருங்கிணைந்து பின்னர் பிளவடைந்த சமயத்தில், 1991 ஆம் வருடம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் அடைந்தது. மத்திய ஆசிய பகுதியில் அமைந்துள்ள கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல வருடமாக பிரச்சனை இருந்து வருகிறது. 

இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஓடும் ஆறு தொடர்பாக பல வருடமாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான எல்லை தொடர்பான பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், நீர்நிலை பகுதிகளில் கண்காணிப்பு காமிரா அமைப்பது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட சண்டை, இருநாட்டு எல்லை பிரச்சனைக்கும் வழிவகை செய்தது. 

இதனையடுத்து, இரண்டு நாட்டினை சார்ந்த இராணுவ வீரர்களும் மோதலில் ஈடுபடவே, சர்ச்சைக்குரிய கிர்கிஸ்தான் பகுதியில் உள்ள பேட்கண் பகுதியில் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் துப்பாக்கிசூடும் நடத்தி கொண்டனர்.

இரண்டு நாட்டு இராணுவ அதிகாரிகள் மோதலில் மொத்தமாக 31 பேர் உயிரிழந்ததாகவும், 150 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கிர்கிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தான் தரப்பில் எந்த ஒரு உயிரிழப்பு தொடர்பான அறிவிப்பு இல்லை. 

எல்லை பிரச்சனை தொடர்ந்து, அப்பகுதியில் வாழ்ந்து வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பை இடங்களுக்கு புலம்பெயர தொடங்கியுள்ளனர். இந்த மோதல் போக்கு இரு நாட்டு போராக ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று உலக நாடுகள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kyrgyzstan Tajikistan Border Fight Issue Peoples and Army Officials Died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->