59 செயலிகளை ஆப்பு.. பாராட்டு மழையில் இந்தியா.!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலத்த உயிரிழப்பு மற்றும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், அதிகாரபூர்வ தகவல் சீனாவால் வெளியிடப்படவில்லை. எங்களது தரப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று மட்டும் சீனா தெரிவித்துள்ளது. 

டிக் டாக், ஹெலோ உட்பட 59 சீன செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதற்கான நடவடிக்கையும் அதிரடியாக எடுக்கப்பட்டது. இந்திய - சீன அரசுகள் எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள உலக நாடுகள் அறிவுறுத்தியது. அமெரிக்காவும் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அறிவித்தது. 

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு செயலாளர் கெய்லி மெக்கானி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை வன்மையாக கண்டித்த அவர், இந்தியாவின் செயலிகள் முடக்க நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். 

59 சீன செயலிகளை இந்தியா முடங்கியுள்ளது. இந்திய - சீன நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்கா அமைதியை விரும்புகிறது. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் சீனாவின் உலகின் பிற நாடுகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. 

இது போன்ற எல்லை  அத்துமீறல் நடவடிக்கைகள் அனைத்தும் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. இருநாட்டு பிரச்சனையை பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kayleigh Mcenany Latest press meet about India - China problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->