தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா பாதுகாக்கும் - அதிபர் ஜோ பைடன் - Seithipunal
Seithipunal


சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் அமெரிக்கா இரண்டு போர் கப்பல்களை தைவானுக்கு அனுப்பியது.

மேலும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா 1.09 பில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ஆயுதங்களை தைவானுக்கு வழங்க பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து தைவான் தொடர்பான கேள்விக்கு, தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என்று செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் போல் இல்லாமல் தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்கப் படை வீரர்கள் பாதுகாப்பார்கள் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe Biden says America will defend if China invades Taiwan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->