சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான் பிரதமரால் பதற்றம்: காரணம் என்ன..?
Japans Prime Minister warns of retaliation if China attacks Taiwan
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றுள்ளார். இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி, டோக்கியோவுக்கு சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளிடையேயான ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி உரையாற்றினார். அப்போது, 'தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ராணுவம் மூலம் ஜப்பான் பதிலடி கொடுக்கும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாத பொருள் மாறியுள்ளது. ஜப்பான் பிரதமரின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும் என சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருவதும், தைவான் மீது போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தி வரும் நிலையில் ஜப்பான் பிரதமரின் இந்த பேச்சு மேலும், பதற்றத்தை அதிகரித்துள்ளது.
English Summary
Japans Prime Minister warns of retaliation if China attacks Taiwan