விசிக எம்எல்ஏ மனைவியை தற்குறி என்ற தவெக நிர்வாகி! பாப்பா.. பாலாஜி.. தனி தொகுதி.. சர்ச்சை குறித்த பின்னணி! - Seithipunal
Seithipunal



திமுகவின் பவள விழாவை கடுமையாக விமர்சித்து தவெக தலைவர் விஜய் பாரதியார் பாணியில் கவிதை ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

இதற்க்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், விசிக எம்எல்ஏ பாலாஜி ஒரு படி மேலே சென்று, விஜய் பாணியிலேயே,

ஓடி ஒளியாதே பாப்பா! 
நீ ஒப்பனையை கலைத்திடு பாப்பா!
கூட்டத்தை கூட்டாதே பாப்பா!
ஒன்றுமறியா குழந்தைகளை கொல்லாதே பாப்பா! என பதிலடி கொடுத்து இருந்தார்.

இதற்க்கு தவெக நிர்வாகி லயோலா மணி, 

"கை கட்டி,வாய் பொத்தி ஊமையாக இருக்காதே பாப்பா !

6 சீட்டோடு முடங்கி விடாதே பாப்பா !

கூனிக்குறுகி அடிமையாக இருக்காதே பாப்பா !

தலித்துக்கு பொது தொகுதி ஒன்றை கேட்டு பெற்றுக் கொள் பாப்பா !

நாம் திமுக இல்லை நாம் தனி கட்சி என்ற சிந்தனை வேண்டும் பாப்பா !

திமுகவை விமர்சித்தால் நீங்கள் முட்டு கொடுக்க வேண்டிய தேவை ஏன்? பாப்பா !

முட்டு கொடுத்து முட்டி வலிக்க வேண்டாம் பாப்பா!

அம்பேத்கர் பெயரை கெடுக்க வேண்டாம் பாப்பா !

பெரியார் சொல்லித் தந்த சுயமரியாதை எங்கே? பாப்பா" என பதிலடி கொடுக்க, மருத்துவரும், விசிக எம்எல்ஏ பாலாஜியின் மனைவியுமான ஷர்மிளா, "அவர் நின்று  வெற்றி பெற்ற  திருப்போரூர் தொகுதியே பொது தொகுதி தான் … இதுக்கூட நெரியாம நீட்டி முழக்கி எழுத வந்துட்டான்" என ஒருமையில் பதில் கொடுத்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள லயோலா மணி, "நீங்கள்தான் ஒன்னா நம்பர் தற்குறி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள் மேடம்.

நான் என்ன கேள்வி கேட்டுள்ளேன் என்று ஒழுங்காக படியுங்கள்.

தலித் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு பொது தொகுதியில் போட்டியிட தொகுதி கேட்டு பெறுங்கள் என்று சொல்லி உள்ளேன்.

அண்ணன் திரு.SS. பாலாஜி அவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது.
அதனால் அவர் பொது தொகுதியில் நின்றுள்ளார். பொது தொகுதியில் மட்டும்தான் நிற்க முடியும். தனி தொகுதியில் நிற்க முடியாது.

தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு தனி தொகுதி இல்லாமல் பொது தொகுதியில் போட்டியிட தொகுதியை திமுக தருமா? அதுதான் என் கேள்வி.

அப்படி கொடுப்பதுதான் உண்மையான சமூகநீதி.

நீங்கள் தற்குறியாக இருந்துவிட்டு எங்களை தற்குறி என்று சொல்வது சிரிப்போ சிரிப்பு வருது 

திமுகவை கேள்வி கேட்டால் உங்களுக்கு எதுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது

மீண்டும் கேட்கிறேன். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொது தொகுதி பெற முடியுமா? 
நான் கேட்பது புரியுதா? புரியாததை போன்று நடிக்கிறீர்களா?

நடிப்பது உங்களுக்கு புதுசு இல்லை.

கோவம் உண்மையாக இருக்க வேண்டும். போலியாக இருக்க கூடாது மேடம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Loyola mani VCK Balaji Sharmila


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->