மஹாராஷ்டிராவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதல்: 07 பேர் பலி, 08 பேர் படுகாயம்..!
7 killed as lorry loses control and crashes into vehicles in Maharashtra
மஹாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 07 பேர் பலியாகியுள்ளதோடு, 08 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்து புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததால், எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்தில் வாகனங்களில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
7 killed as lorry loses control and crashes into vehicles in Maharashtra