தென்கொரியா || ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெறாமல் இருந்த ஹாலோவீன் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுவதற்காக தலைநகர் சியோலில் இதாவோன் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவிற்காக அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இடாவோன் பகுதியில் ஒரு குறுகிய தெருவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 20 வயதில் இருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தென் கொரியாவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சியோலில் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் தென்கொரிய அரசுடன் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaishankar expresses condolences over deaths in halloween in south korea


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->