எரிமலை குழம்பில் சிக்கி உயிரை விட்ட நபர்கள்.. பாம்பீ நாகரீகத்தின் எச்சத்தில் அறிய தகவல்.! - Seithipunal
Seithipunal


இத்தாலி நாட்டில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக, பண்டைய ரோம பேரரசின் பாம்பீ நகரத்தினை அழித்த எரிமலை சீற்றத்தில் உயிரிழந்த இரண்டு மனிதர்களின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் எரிமலை வெடித்து சிதறுகையில் தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம் என்றும், பின்னர் எரிமலை குழம்பால் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர். 

இது குறித்து பாம்பீ தொல்பொருள் பூங்கா இயக்குனர் மாசிமோ ஓசன்னா தெரிவிக்கையில், " கடந்த கி.பி 79 ஆம் வருடத்தில் எரிமலை சீற்றத்தால் பாம்பீ நகரம் அழிந்தது. இந்த எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சாம்பலாக புதைந்துவிட்டனர். 

பாம்பிய நகரத்தின் பெரிய மாளிகை அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. தற்போது கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களை வைத்து பார்க்கையில், அவர்களுக்கு 30 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம். கழுத்துக்கு கீழ் கம்பளி ஆடைகள் தடயமும் இருந்தது. இது தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆராய்ச்சியின் முடிவில் பல தகவல் வெளியாகும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy pompeii Volcano Human Ancient body Discovers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->