இறந்தவரின் இறுதி சடங்குக்கான ஏற்பாடு.! சற்று நேரத்தில் கண்ட பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


இத்தாலி நாட்டில் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்த அவருடைய குடும்பத்தினர் இறந்தவரின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் இறுதிச் சடங்கின்போது இறந்தவருடைய புகைப்படத்தை மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். 

அப்பொழுது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், புகைப்படத்தில் இருந்தவர் அவர்களுடைய குடும்ப உறுப்பினர் அல்ல. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு ஒருவர் இறந்த செய்தி இவரது வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

அதேநேரம் இறந்ததாக கூறிய நபர் மருத்துவமனையில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைக்கேட்ட அவர்களது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

italy corona patient wrong information


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal