''காஸாவை ஹமாஸிடம் இருந்து விடுவிப்பதே எங்கள் இலக்கு, அதை ஆக்கிரமிப்பதல்ல'': இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்..!
Israeli Prime Minister Benjamin Netanyahu says his goal is to liberate Gaza
இஸ்ரேல் , ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023-இல் போர் தொடங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 'காசாவை விடுவிப்பதுதான் எங்களுடைய இலக்கு' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களுடன் பேசியதாவது: வேலையை முடித்து ஹமாஸின் தோல்வியை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், எங்கள் இலக்கு காசாவை ஆக்கிரமிப்பதல்ல, காசாவை விடுவிப்பதாகும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், காசாவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய கால அட்டவணை உள்ளதாகவும், அங்குள்ள இலக்குகளில், காசாவை ராணுவமயமாக்குதல், இஸ்ரேலிய ராணுவம் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் இஸ்ரேலியரல்லாத சிவில் நிர்வாகம் ஆகியவை இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காசாவின் பல பிரச்னைகளுக்கு ஹமாஸ் போராளி குழுதான் முக்கிய காரணம் என்றும், காசா பகுதியில் உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Israeli Prime Minister Benjamin Netanyahu says his goal is to liberate Gaza