இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் காசாவில் விழுந்து விபத்து! 2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி! 
                                    
                                    
                                    Israeli military helicopter crashes in Gaza 2 Israeli soldiers killed
 
                                 
                               
                                
                                      
                                            இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் மோதலில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற்று வரும் இந்த போரில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது  தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களால் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரழந்துள்ளன. இதன்படி நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் நடத்தும் தாக்குதல்களிலும் இஸ்ரேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவில் காசாவின் ரபா பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரழந்தனர்.
இந்த விபத்தை குறித்து இஸ்ரேல் ராணுவம்:- காயமடைந்த வீரரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் ஹெலிகாப்டர், காசாவில் உள்ள ரபா பகுதியில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்து, எதிரிகளின் தாக்குதல் காரணமாக விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்தி  வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானப்படையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தகவல் அறிவித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                        Israeli military helicopter crashes in Gaza 2 Israeli soldiers killed