இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் காசாவில் உணவு, மருந்து பொருட்கள் சீர்குலைந்த இறக்குமதி...!!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் காசாமீது நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முக்கியமாக பெண்கள், குழந்தைகள் என காசா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதுமட்டுமின்றி, இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஜபாலியா நிர்வாகம்:

இதுகுறித்து டக்கு காசாவின் 'ஜபாலியா' நிர்வாகம் தெரிவித்ததாவது,"ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள், வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்தது. தற்போது காசாவில் மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது.

இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன. தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இது தற்போது கடுமையான நேரமாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli airstrikes disrupt food and medicine imports into Gaza


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->