ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்...ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி! - Seithipunal
Seithipunal


ஹவுதி தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஏமனில் குண்டுமழை பொழிந்தது.இந்த அதிரடி தாக்குதலில்  8 பேர் பலியாகினர். 

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது.பலரை பிணைக்கைதிகளாக காமஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்தது.

அதிலும் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் அங்குள்ள ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். மேலும், ஹமாஸின் சுரங்கங்கள் மீதும் இஸ்ரேல் தாக்கினர். இந்தச் சூழலில் தான் சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தினர்.

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்கள் , இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த டிரோன் தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இதில், 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எலியட் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இருப்பிடங்கள், பாதுகாப்பு அலுவலங்கள், உளவுபிரிவு அலுவலகங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதில்  8 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் காயமடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel which was showered with heavy rain a response to the Houthi attack


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->