மீண்டும் பதற்றம்..? 'நாங்கள் நினைத்தால் ஒரு டிரோனை அனுப்பி ட்ரம்ப்பை அங்கேயே கொலை செய்யலாம்': ஈரான் பகிரங்க மிரட்டல்..!
Iran publicly threatens to send a drone to kill Trump if we want
கடந்த மாதம் ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் வான்வெளி தாக்குதலை நடத்தியதால் பெரும் பதற்றம் அதிகரித்தது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியது. தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையிலான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரான் தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதான ஆலோசகரான ஜாவத் லாரிஜினி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
-xrzxt.png)
அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு ஆடம்பர பங்களா இருக்கிறது.
அதில்தான் டிரம்ப் அடிக்கடி தங்குவார். அங்குதான் சூரிய குளியல் எடுப்பார். இது எங்களுக்கு தெரியும். நாங்கள் நினைத்தால் அந்த சமயத்திலேயே ஒரு டிரோனை அனுப்பி அங்கேயே கொலை செய்யலாம்’ என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
அத்துடன், டிரம்ப் மீது ஈரான் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றதாகவும், டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் ஆன்லைன் பரப்புரையே நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ட்ரம்பை கொலை செய்வதற்காகவே ஆன்லைன் பரப்புரையில் நிதியும் திரட்டுகிறார்கள் என்றும், ஜூலை 07-ஆம் தேதி வரை டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக 27 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், 100 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டுவதை இலக்காக கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-ze3wh.png)
அத்துடன், டிரம்பை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு இந்த 100 மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலுணம், தற்போதுதான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது என்றும், இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Iran publicly threatens to send a drone to kill Trump if we want