ஜெயலலிதாவின் முடிவை நான் வரலாற்று பிழை என பேசவில்லை - கடம்பூர் ராஜு விளக்கம்.!!
kadambur raju explain about jeyalalitha issue
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
"1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம் என்றுத் தெரிவித்தார்.
அதாவது, பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று கடம்பூர் ராஜூ விமர்சித்து பேசியதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன். தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
kadambur raju explain about jeyalalitha issue