ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையும் ராணுவ கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்; ஈரான் கடும் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா -இஸ்ரேல்- ஈரான் போர் உச்சத்தை எட்டிய நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அதிரடியான தாக்குதல்கள் மற்றும் முடுவுகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் நீர்வழி போக்குவரத்தில் முக்கியமாக 20 வீதம் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. ஈரானின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகள் உல் நுழைய தடை விதித்தது.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில், இந்த நீரினை வழியாகப் பயணிக்கும் போர்க்கப்பல்கள் குறித்து தற்போது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஹார்முஸ் நீரிணையானது சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சிவில் மற்றும் வணிகக் கப்பல்களின் 'தீங்கற்ற போக்குவரத்திற்காக' (harmless passage) திறந்துவிடப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனாலும், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இப்பகுதிக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு ராணுவக் கப்பல்கள் மீது கடுமையாக எதிர்வினை ஆற்றப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அதன்படி, ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் போர்க்கப்பல்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும் அல்லது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் என IRGC அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை அழித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரான் உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

ஈரானின் இந்த அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படும் அபாயத்தை உருவாகக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran issues a stern warning that military vessels entering the Strait of Hormuz will be attacked


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->