'இஸ்ரேலை அழிக்க ஈரான் மூன்று வழி திட்டங்களை உருவாக்கி யுள்ளது.' இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த 08 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.  இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ''இஸ்ரேலை அழிப்பது என ஈரான் ஆட்சியாளர்கள் உறுதிபூண்டனர்'', என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஈரான் செயல்படுகிறது. அதனை முறியடிக்க எங்கள் முன் உள்ள கடைசி வாய்ப்பாக அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரேலை அழிக்க ஈரான் ஒரு உத்தியை உருவாக்கி உள்ளதாகவும்,  இதனை நம்புவதற்கு சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அவர்கள் மூன்று வழி திட்டங்களை உருவாக்கி உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி என்ற ஆபத்தான பாதையை அவர்கள் தேர்வு செய்து, ஸ்ரேலை அழிப்போம் என ஈரான் ஆட்சியாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்.  அத்துடன், பேரழிவை ஏற்படுத்தும் பல ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளதோடு, பல ஆண்டுகளாக சர்வதேச அணுசக்தி முகமையை ஏமாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அறிவிக்கப்படாத அணு ஆயுத சோதனைகளை ஈரான் நடத்தியுள்ளதாகவும், ஆனால், அது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, 'பாலிஸ்டிக்' ஏவுகணை என்ற பாதையை அவர்கள் வைத்துள்ளனர் என்றும், இதனை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். ஆனால், யாரும் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஈரான் ஆயிரக்கணக்கான 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை தயாரித்து சேமித்து வைத்துள்ளது. ஆறு ஆண்டுகளில் 20 ஆயிரம் 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை ஏவும் அளவுக்கு அவர்கள் திறன்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்து எங்களை ஈரான் அழித்துவிடும் என்பதால், இந்த இரண்டு திட்டங்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 20 மாதங்களில் இந்த பகுதியில் ஈரான் கட்டமைத்த ஆறு ராணுவங்களை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும், பல ஆண்டுகளாக இஸ்ரேல் மீது ஈரானியர்கள் மறைமுகமாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,  தண்டனையின்றி அவர்கள் இதனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran has developed three-way plans to destroy Israel Israeli ambassador to India explains


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->