ரஷ்யாவின் தள்ளுபடி விலை காரணமாக ஈரானில் எண்ணை ஏற்றுமதி கடும் வீழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்று வருவதால் இரு நாட்டினுடைய பொருளாதாரம், வர்த்தகம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தனது பொருளாதாரத்தை சரிசெய்ய பெட்ரோலியம் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் பெட்ரோலியத்தை வழங்கி வருகிறது.

இதனால் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துள்ளன. இதனைத் தொடர்ந்து சீனா, ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் பெட்ரோலியம் இறக்குமதி செய்வதால் ஈரானின் சீனாவுக்கான ஏற்றுமதி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் ஈரான் சீனாவுக்கு ஏழு லட்சம் முதல் 9 லட்சம் வரை பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், தற்போது சீனாவுக்கான ரஷ்யாவின் ஏற்றுமதி 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

மேலும் சீனாவின் இறக்குமதி குறைந்ததால் ஈரானின் 20 எண்ணெய் கப்பல்கள் 4 கோடி பீப்பாய் எண்ணெயுடன் சிங்கப்பூர் கடற்பகுதியில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran export down as Russia discount on petroleum


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->