ட்ரம்பிற்கு பிடிவாரண்ட்.. அடம்பிடிக்கும் ஈரான்.. அதிர்ச்சியான உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2018 ஆம் வருடத்தில், ஈரான் நாட்டுடன் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஈரான் நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. 

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் ஈராக் தலைநகரில் உள்ள பாக்தாத்தில் வைத்து அமெரிக்க விமான ஏவுகணை தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். மேலும், ட்ரம்பின் அறிவுறுத்தலின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. 

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரின் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றசாட்டை ஈரான் அரசு பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில், ட்ரம்பை கைது செய்ய பிடிவாரண்ட்டும் ஈரான் பிறப்பித்துள்ளது. 

இதற்காக சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டெர்போலின் உதவியை நாடிய நிலையில், டிரம்ப் உள்ளிட்டோர் மீது ரெட் கார்டு நோட்டிசும் பிறப்பிக்க வேண்டும் என்றும் ஈரான் அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக இன்டர்போல் தரப்பில் எவ்வித கருத்தும் பதிவு செய்யப்படாத சூழலில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ஈரானின் செயல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Complaint charge for trump arrest due to Kasim Murder case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->