ஈரானில் படுபயங்கரம்! இரட்டை குண்டுவெடிப்பு! சிதறிய மனித உடல்கள்!  - Seithipunal
Seithipunal


ஈரானில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அவரின் நினைவு நாளான இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் கெர்மானில் சுலைமானின்  கல்லறை அமைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு, ஜன.3 -ல் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமான் கொல்லப்பட்டார்.

அவருக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றுநடைபெற்றபோது இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புரட்சிகர காவல்படையின் தலைவராக காசிம் சுலைமானி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran bombblast attack


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->