அமெரிக்கா :: சிலிக்கான் வேலி வங்கி திவால்.! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள் - Seithipunal
Seithipunal


சிலிக்கான் வேலி வங்கி அமெரிக்காவின் 20 பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும்.1983இல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, தகவல் தொழில்நுட்பத்துறையிலும், வெளிநாட்டு முதலீட்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் பெடரல் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தியதால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த டிசம்பரில் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் அதிக வட்டி விகிதங்கள், ஐபிஓக்கள் இழப்பு மற்றும் நிதி வறட்சி ஆகியவற்றால் நிதி இடைவெளியை சரி செய்ய 2 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என தெரிவித்தது. இதனால் முதலீட்டாளர்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து வங்கியின் பங்குகள் 48 மணி நேரத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இதனால் பங்குகளின் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால், அமெரிக்க ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவால் ஆகியுள்ளதால், உலக அளவில் வங்கித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Investors shock as US silicon valley bank bankrupt


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->