ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் - சர்வதேச நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த வருடம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதை, குழந்தைகளை நாடு கடத்துதல் என பல்வேறு குற்றங்களை ரஷ்யா புரிந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் நெதர்லாந்தின் ஹாக் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்பட்டன. இதைத்தொடர்ந்து போரின் விதிகளை மீறி உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் உக்ரைனில் இழைக்கப்படும் போர் குற்றங்களுக்கு ரஷ்யா அதிபர் புதின் முழு பொறுப்பானவர் என்றும், ஒரு அதிபராக உக்ரைனிலிருந்து குழந்தைகள் நாடு கடத்தப்பட்டதை தடுக்க தவறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த தீர்ப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் என்றும், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இனி தான் ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நியாயமானது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International court issues arrest warrant for Russia president Putin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->