இங்கிலாந்து || இளவரசர் மூன்றாம் சார்லசை சந்திக்கும் பிரதமர் சுனக்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை வகிக்கிறார். 

இவருக்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர் யார்க்ஷயர் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றபோது, பகவத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார். அப்படி செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான். தன்னை இந்து என்று கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசாங்கத்தில் 57-வது பிரதமராக தேர்வாகி உள்ள ரிஷி சுனக், இன்று அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசுகிறார். 

அதன் பின்பு, அரசர் சார்லஸ், ரிஷி சுணக்கை முறைப்படி புதிய பிரதமராக அறிவிக்கிறார். பின்பு, முதன்முறையாக பிரதமராக ரிஷி சுனக் உரையாற்ற இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரின் மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போது, "இங்கிலாந்து மக்களுக்காக நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நான் நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் தெரிவித்துள்ளதாவது, "தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம்" என்று புகழ்ந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland new president sunak meet ingland


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->