வீதியெல்லாம் சிவப்பு நிறத்தில் வெள்ளம்.. கண்டுகொள்ளாத மக்களின் கூல் பதில்..! - Seithipunal
Seithipunal


சாய ஆலையில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, சாலைகளில் புகுந்த வெள்ளம் சிவப்பு நிறத்துடன் தோற்றம் அளித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்தா ஜெங்கோட் கிராமத்தில் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சாய ஆலையில் இந்தோனேஷியாவில் தயார் செய்யப்படும் பாரம்பரிய வகையிலான பாடிக் முறையில் சாயம் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த ரசாயனம் வரைபடங்களை குறிக்க மெழுகு கலந்து தயார் செய்யப்படுகிறது. இந்தோனேஷியாவில் இருக்கும் பல சாய ஆலைகள் ஆறுகள் அருகே இருப்பதால், அங்குள்ள சீதோஷ்ண சூழ்நிலை காரணமாக மழை பெய்து வெள்ளங்கள் ஏற்பட்டு சாலைகளில் ஓடும் நீரில் சாயம் கலப்பதாகவும் கூறப்படுகிறது. 

அவ்வாறாக கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜகர்தா நகரின் வடக்கே உள்ள மற்றொரு கிராமத்திலும் சாலைகளில் பச்சை நிற நீர் ஓடியுள்ளது. தற்போது, ஜெங்கோட் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாய ஆலையில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, சாலைகளில் ஓடிய நீர் அனைத்தும் சிவப்பு நிறத்துடன் தோற்றம் அளித்துள்ளது. இது குறித்து உள்ளுர் மக்கள் தெரிவிக்கையில், சாலைகளில் விதவிதமான நிறத்தில் நீர் ஓடுவது இயல்பானது என்றும் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia Road Flood water Red Color due to Flood Entered Batik Factory


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal