இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. 77 பேர் பலி?.. கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. 

இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மற்றொரு இடத்தில உள்ள கட்டிட விபத்தில் 42 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவல் உறுதிப்படத்தப்படாத நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia Earthquake Building Collapse 77 Persons Died


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->