17 வயது சிறுமியை திருமணம் செய்து, 22 நாட்களில் வீட்டிற்கு அனுப்பிய 78 வயது கிழவன்..! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவை சார்ந்த 78 வயதான முதியவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும், திருமணம் முடிந்த 22 நாட்களுக்கு உள்ளாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்தோனேஷியா நாட்டினை சார்ந்த அபா சர்னா மற்றும் அவரது மனைவி நோனி நவிதா விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த புதுமண தம்பதிகள் வயது பிரச்சனை காரணமாக மக்களை ஈர்த்துள்ள நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே அபா விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த செய்தி அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளக்கியுள்ளது.

இந்த விஷயம் குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், " இருவருக்குள் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இருவருக்கும் வயது விதியசம் இருந்த சமயத்திலும், இரு குடும்பத்தாரிடையே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. திருமணத்திற்கு முன்னதாக மணமகன் வீட்டார் சார்பாக ரூ.50 ஆயிரம் ரொக்கம் (இந்தோனேஷியா மதிப்பில் 259 ரூபியா) வழங்கப்பட்டுள்ளது. 

இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதும் வரதட்சணை பொருட்கள் மீண்டும் கொடுக்கப்பட்டது. இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எண்ணினோம் " என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான தகவல் புகைப்படத்துடன் மணப்பெண் நண்பரால் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் மணமகளின் குடும்பத்திற்கு மணமகன் வரதட்சணை கொடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia Couple Apply Divorce man aged 78 and girl age 17


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal