பட்டத்தோடு காற்றின் வேகத்தில் பறந்த சிறுவன்.. காத்திருந்த அதிஷ்டம்..! பகீர் வீடியோ காட்சி.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியா நாட்டில் பட்டம் விடும் சமயத்தில், அந்த பட்டத்துடன் சேர்ந்து சிறுவன் 30 அடி உயரத்திற்கு பறந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

இந்தோனேஷியா நாட்டில் உள்ள லாம்பாங் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு, சிறுவர்கள் பிரம்மாண்டமான பட்டத்தை தயார் செய்துள்ளனர். இந்த பட்டத்தை காற்றில் விட முயற்சி செய்கையில், 12 வயது சிறுவன் ஒருவன் பட்டத்தின் கயிற்றை தனது கையில் இருக்க பிடித்துள்ளான். 

இந்த நிலையில், சிறிது நேரத்திற்குள்ளாகவே உயரே எழும்பி பட்டம், காற்றின் வேகத்தால் மேலே நோக்கி பறந்துள்ளது. இதனையடுத்து சிறுவனும் பட்டத்துடன் சேர்ந்து பறந்த நிலையில், 30 அடி உயரம் வரை சென்ற சிறுவன், பட்டத்தின் கயிறுகளை கையில் பிடிக்க முடியாமல் தவித்துள்ளான். 

பின்னர் ஒரு சமயத்திற்கு மேலாக பட்டத்தின் கயிறு கைகளை அதிகளவு சேதத்திற்கு உள்ளாக்கவே, 30 அடி உயரத்தில் இருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளான். சிறுவனை அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக பிடித்த நிலையில், லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளான். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia Child Fly Kite 30 Feet after slipped form sky


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->