அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களால் சாதனை படைத்த இந்தியா.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்றால் பெரிது பாதிப்புக்குள்ளானார்கள். அதன் காரணமாக, வெளிநாடுகளில் படித்து வந்த பலரும் தங்களின் பாதுகாப்பிற்காக சொந்த நாடுகளுக்கு திரும்பினர். அவ்வாறு வந்தவர்களில் இந்திய மாணவர்களும் ஏராளம்.

இதுமட்டுமல்லாமல், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா, உக்ரைன் போரில், அந்த நாட்டில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் மற்றும் வங்காளதேசததைச் சேர்ந்த மாணவர்களையும் இந்தியா மீட்டு தனது சொந்த நாடுகளுக்கு அழைத்து வருவதற்கு உதவியது.

இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய மாணவர்கள் அமெரிக்கா, ஐரோப்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் படி, தற்போது அமெரிக்காவில் மட்டும் சுமார் 9.14 லட்சம் சர்வதேச மாணவர்கள் படித்து வருகின்றனர். 

சில வருடங்களில், அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா சாதனை படைத்தது. இதில், சீனாவிற்கு அடுத்து, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனை, ஓபன் டோர்ஸ் என்ற விரிவான தகவல் சேகரிப்பு அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

அதில் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு மேல்படிப்பு படிப்பதற்காக சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,67,582 ஆக இருந்தது. அவர்களில் பெருமளவில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். 

இருப்பினும், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் கல்வி உள்ளிட்டவையும் சர்வதேச மாணவர்கள் இடையே பிரபலமடைந்து காணப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian students studing in america india second place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->