இந்திய நபருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்.! ஒரேநாளில் கோடீஸ்வரரான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  வேலைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்ற அவர், அங்கு ஒரு நகைக்கடை நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் 3,200 திர்ஹம் சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அஜய் ஓகுலாவுக்கு லாட்டரி மூலம் சுமார் 15 மில்லியன் திர்ஹம் கிடைத்துள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ33 கோடி மதிப்பு ஆகும்.

இது குறித்து ஓகுலா தெரிவித்ததாவது, "எனக்கு லாட்டரியின் மூலம் பரிசு கிடைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. லாட்டரியின் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை இந்தியாவில் உள்ள எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். 

அப்போது, அவர்களும் இதை நம்பவில்லை. தனக்கு கிடைத்த இந்தத் தொகையில் ஒரு தொண்டு அறக்கட்டளையை உருவாக்குவேன். இந்த பணம் எனது சொந்த ஊர் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள அடிப்படைத் தேவைகளை செய்வதற்கு பலருக்கும் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian man thirty three crores win lottery in dubai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->