அயர்லாந்தில் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை: மர்ம நபர்கள் கொடுரமாக தாக்கி ஆடையை களைந்து அட்டூழியம்..!
Indian man brutally attacked and stripped naked by unidentified assailants in Ireland
அயர்லாந்தில் 40 வயதான இந்தியர் ஒருவர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் டப்ளினின் தலாக்ட் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தில் இந்தியரின் முகம், கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்தியத் தூதர் அகிலேஷ் மிஸ்ரா கூறியுள்ளதாவது : சம்பவத்தை குற்றச்சாட்டு மட்டுமே எனக் கூறுகின்றனர். பிறகு காயம் மற்றும் ரத்தக்கசிவு எப்படி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு மற்றும் உதவி அளித்த அயர்லாந்து மக்கள் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த குற்ற செயலில் ஈடுப்பட்ட குற்றவாளி நீதி முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட இந்தியரை அப்பகுதி கவுன்சிலர் பேபி சந்தித்து நலம் விசாரித்த்துள்ளார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபர், மூன்று வாரங்களுக்கு முன்பு தான் இங்கு வந்துள்ளார். தாக்குதல் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரால் எதுவும் பேச முடியவில்லை. பார்வையாளரை சந்திக்க விரும்பவில்லை எனக்கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் இனவெறி ரீதியில் நடந்ததா என்ற கோணத்தில் அயர்லாந்து போலீசார் விசாரித்து வருவதோடு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Indian man brutally attacked and stripped naked by unidentified assailants in Ireland