இந்திய மீனவர்களை சிறைபிடித்த பாகிஸ்தான்!  - Seithipunal
Seithipunal


அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை கைது பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே  மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர், மீனவர்கள் 17 பேரும் தங்கள் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களை திரும்பிச்செல்லுமாறு எச்சரித்தனர்.

ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீனவர்கள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அங்கேயே மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 17 மீனவர்களையும் கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian fishermen arrested by Pakistan navy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal