'எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும், எனக்கு ஓட்டு போட வேண்டாம்'; சீமான் அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை திருவேற்காட்டில், நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு தண்டனை, தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற ஆதரவு உட்பட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சீமான் பேசும் போது கூறியதாவது:  நாம தமிழர் கட்சி முன்னெடுக்கும் அரசியல் கோட்பாட்டை அறிந்து கொள்ளவே, அரை நுாற்றாண்டு ஆகும் என்று குறிப்பிட்டதோடு, எல்லாமே ஈ.வெ.ரா., என்பது, அவர்களது கோட்பாடு. இந்த நாட்டை திருடர் கூடமாக மாற்றி, அதில் மக்களுக்கும், 1,000 ரூபாய் பகிர்ந்தளித்து, திராவிட திருட்டு கூட்டம் செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

அத்துடன், இந்த நிலத்தில் இருக்கும் கட்சிகளை ஒழித்து, துாய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றும், தனித்து நின்று அங்கீகாரம் பெற்றதாகவும்,  கடைசி நேரத்தில் நமக்கு சின்னத்தை ஒதுக்கினர். மக்கள் நம் சின்னத்தை தேடி, 8.22 சதவீதம் என, 36 லட்சம் ஓட்டுகளை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்களித்து இவ்வளவு துாரம் நம்மை ஏற்றி விட்டவர்கள், இன்னும் மீதியிருப்பதையும் நமக்கு துவார்கள் என்றும், 2026 தேர்தலில் நம்மை ஆதரிப்பர். 'டிவி', மடிக்கணினி, இலவச அரிசி, மோட்டார் பைக், கார் தருவோம் என, அவர்கள் அறிவித்தால், 'வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவேன்' என, நான் சொல்வேன் என்று பேசியுள்ளார்.

அதாவது, இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; அது வீழ்ச்சி திட்டம்; கவர்ச்சி திட்டம். தேசத்தை நாசமாக்கியது இலவசம் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இலவசங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை என்றும், நா.த.க., ஆட்சியில், பஸ் கட்டணம் கிடையாது மற்றும் சிறந்த கல்வியை வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும், எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போடுங்கள் என்றும், எத்தனை பெரியார்கள் உள்ளனர் என, ஜன 03-ஆம் தேதி சொல்லப் போகிறேன். அன்று, தற்போது அடையாளம் காட்டப்பட்டிருக்கும் பெரியாரை அடக்கம் செய்துவிட்டு தான் வெளியேறுவேன் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல், பசி, பட்டினி இல்லாத நாட்டை, அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம் என்றும், நல்ல கல்வி, குடிக்க தண்ணீர், பயணிக்க நல்ல பாதை, நல்ல மருத்துவம், அரசு மருத்துவமனைகளில் தான் அனைவருக்கும் சிகிச்சை, அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என, சட்டத்தை இயற்ற வேண்டும். அப்படி செய்தால், நல்ல சமூகம் படைக்கப்படும். அதை நோக்கியே என்னுடைய பயணம் இருக்கும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் அதிகாரத்துக்கு வந்த பின், பாலியல் குற்றம் நடந்தால், குற்றவாளிகளை உடனுக்குடன் கொன்று விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நம் ஆட்சியில், 'பார்த்து போ, பெண்களை எதுவும் செய்து விடாதே' என, ஆண் பிள்ளைகளை பெற்றோர் அறிவுறுத்துவர். பெண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி சுடுதல் முதல் அனைத்து தற்காப்பு கலைகளும் கற்று தர வழி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹிந்துக்களை பா.ஜ.,வும், சிறுபான்மையினரை தி.மு.க.,வும் அணி திருட்டுகிறது. இதனால் நாம், தமிழர்களை ஒருங்கிணைக்கிறோம் என்று பொதுக்குழு கூட்டத்தில் சீமான் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman announced that those who support E Ve Ra should not vote for him


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->