நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் மாயம்.! தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் மலையேற்றம் சென்ற, மாயமான இந்தியரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிஷாங்கத் பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலு(34). மலையேற்ற வீரரான இவர், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள அன்னபூர்னா சிகரத்தை நோக்கி நேற்று காலை தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதையடுத்து, மலையேற்றப் பயணத்தை நடத்திய குழுவின் தலைவர் மிங்மா ஷெர்பா, அன்னபூர்னா சிகரத்தை நோக்கிச் சென்ற அனுராக் மாலு காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அனுராக் மாலு காணாமல் போன சிறிது நேரத்திலேயே நாங்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டோம் என்றும், இருப்பினும் மாலை வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஷெர்பா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அனுராக் மாலுவை தேடும் பணி தீவிரமாக இன்றும் நடைபெற்று வருகிறது.

அன்னபூர்ணா மலை உலகின் பத்தாவது உயரமான மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,091 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Climber Goes Missing At Mt Annapurna In Nepal Search On


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->