உக்ரைனிற்கு உதவும் இந்தியா?...ஏற்றுக் கொள்ளுமா ரஷ்யா?
India to help ukraine will russia accept
கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக புதின் அண்மையில் அறிவித்தார். தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது, உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் இந்தியா, சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும் இந்திய பிரதமர் மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குவதாக தெரிவித்த அவர், உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும் என்றும், இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
India to help ukraine will russia accept