05 ஆண்டுகளுக்கு பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க தொடங்கிய இந்தியா..! - Seithipunal
Seithipunal


கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீன நாட்டினருக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

இந்நிலையில், சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்தியா தொடங்கியுள்ளது. மேலும் கோவிட் பரவல் காரணமாகவும் சீனர்களுக்கு விசா வழங்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. நாட்டினருக்கு விசா வழங்கப்பட்ட போதும், சீனர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சீனாவும் அங்கு படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் படிக்க வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்காமல் இருந்தது.

இதனிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்ததில் இரு தரப்பு உறவை மேம்படுத்தவது என முடிவு செய்யப்பட்ட்டுள்ளது. அதன்படி, சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

அத்துடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து உரையாடி இருந்தார்.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் என அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜூலை 24, 2025 நாளை முதல் இந்தியா வருவதற்கு சீனர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.பிறகு இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவா ஜியாகுன் கூறுகையில், இந்தியாவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளவும் ஆலோசனை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும், இரு நாடுகளுக்கு இடையே மக்கள் இடையே பரிமாற்றங்களை எளிதாக்கவும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India starts issuing tourist visas to Chinese after 5 years


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->