தாலிபான்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்து ஓராண்டிற்கும் மேலான நிலையில், பெண்களின் பொது சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வண்ணம் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

ஆடைக்கட்டுப்பாடு, ஆண்களின்றி வெளியே செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை, உயர்கல்விக்கு தடை என பெண்கள் மீதான அடக்கு முறையை அதிகரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா தலைமை வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு தாலிபான்களை வன்மையாக கண்டித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐநாவுக்கான இந்திய தூதர் மற்றும் டிசம்பர் மாத ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான ருச்சிரா கம்போஜ் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கும் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தடை விதித்தது மிகவும் அச்சத்தையும், கவலையும் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலிபான்களின் இந்த நடவடிக்கையை உடனடியாக மாற்றியமைக்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India led UN security council condemns taliban


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->