உக்ரைனுக்கு உதவும் வகையில் இன்று பொருட்களை அனுப்பும் இந்தியா.. பிரதமர் மோடி தகவல்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால் அங்குள்ள மக்கள் பதற்றமான சூழ்நிலையில் உள்ளன. உக்ரைனுக்கு பல நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனிடையே, போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் நிலவரம், இந்தியர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு அரசு இயந்திரம் 24 மணி நேரமும் பணியாற்றுவதாக பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

உக்ரைன் எல்லையில் நிலவிய சூழ்நிலையை சமாளிக்க முதற்கட்ட நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் அண்டை நாடுகள், வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்தியா உதவும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india help to ukrain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->