சீனா, ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா போர் பயிற்சி.! அமெரிக்காவுடனான உறவை பாதிக்காது - பென்டகன் - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை ரஷ்யாவால் நடத்தப்பட்ட "வோஸ்டாக் 2022 " ராணுவ கூட்டுப் பயிற்சியில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியா பங்கேற்றது.

இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா போர் பயிற்சியில் ஈடுபடுவது இந்தியாவின் தனிப்பட்ட முடிவு எனவும், அமெரிக்கவுடனான பாதுகாப்புத்துறை நல்லுறவை நெருக்கமாக இந்தியா பேணி வருகிறது எனவும், அமெரிக்கா பாதுகாப்புத் துறை தலைமையிடம் பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும் யாருடன் போர் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது இந்திய சுயமாக எடுக்க முடிவு என்றும், ஆசியாவில் இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான உறவுகள் பாதிப்பு இல்லாமல் சீரான நிலையில் இருப்பதாகவும், அதைத் தொடர்வதில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும், பெண்டகன் செய்தித் தொடா்பாளா் பிரிகேடியா் ஜெனரல் பாட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ஆசியாவின் தென் சீனகடலில், சீனாவின் நிலைப்பாடு உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா அவர்களுடன் போர் பயிற்சி ஈடுபட்டது ஒரு விமர்சனமாக பார்க்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India army exercise with Russia and China wont affect US relations


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->