தொலைபேசியில் உரையாடிய இந்தியா - அமெரிக்கா முப்படைத்தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானும், அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவர் மார்க் மிலேவும் தொலைபேசியில் அழைப்புக் கொண்டு பேசினர். 

அப்போது அவர்கள் இருவரும் பேசியதாவது, "பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலைகளில் நிலவரங்கள் குறித்தும், இருநாட்டின் ராணுவ உறவுகள், அவற்றின் இயங்குதன்மை போன்றவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

இந்த தகவலை அமெரிக்க கூட்டுப்படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்த அவர், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பதில் முக்கிய பிராந்திய தலைவராக இந்தியா விளங்குகிறது என்றும் தெரிவித்தார். 

தற்போது, இந்திய எல்லையில் சீன படைகளின் அத்துமீறல்கள் நடந்து வரும் நிலையில், இந்திய-அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதிகள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india america chief defense discuss in mobile phone


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->