ராகிங் என்ற பெயரில், வாட்சப் குழுவில் ஆபாச படம் பகிர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம்..! விசாரணையில் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயில வரும் மாணவிகளுக்கு ரேகிங் என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் பலாத்கார கொடூரங்கள் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவலை கண்ணீருடன் சமூக ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தை பொறுத்த வரையில், புதியதாக வரும் மாணவிகளின் அலைபேசி எண்ணை பழைய மாணவர்கள் பெற்றுக்கொண்டு, பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அலைபேசியில் வாட்சப் செயலி மூலமாக மாணவிகளை சேர்த்துவிட்டு, தனது நண்பர்களுடன் கூட்டமாக சேர்ந்து மாணவிகளை மிரட்டி, நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து தங்களின் அலைபேசிக்கு அனுப்பி வைக்க மிரட்டி வந்துள்ளனர். 

மேலும், பெண்களின் அலைபேசி எண்ணிற்கு ஆபாச வீடியோ காட்சிகள், நிர்வாண படங்கள் போன்றவற்றை அனுப்பி பாலுணர்ச்சியை தூண்ட வழிவகை செய்கின்றனர். இந்த விடீயோக்களை கண்டுகொள்ளாது இருந்தாலும், கண்டுவிட்டு கல்லூரிக்கு சென்றாலும் இது குறித்த துயரத்தை வெளியே கூறாமல் சில மாணவிகள் ஒதுங்கி செல்வதும், சிலர் ஒத்துழைப்பதுமாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி மனத்துடந்து தற்கொலைக்கு முயற்சித்த நேரத்தில், மாணவிக்கு தொடர்பு கொண்ட கொடூரன்கள் நிர்வாண படத்தை அனுப்பி வைக்க கூறி மிரட்டியுள்ளனர். தான் இறந்தாலும் தன்னால் அனைவருக்கும் அவமானம் ஏற்படலாம் என்று யோசனை செய்த மாணவி தனது தந்தையிடம் விஷயத்தை தெரிவிக்கவே, கல்லூரி நிர்வாத்திடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

மேலும், இது தொடர்பான புகார் இது முதல் முறை இல்லை என்பதும், இது போல பல கொடூரன்கள் அரங்கேறியுள்ளதும் வெளிவராமல் இருக்கிறது. இதுமட்டுமல்லாது யாழ்ப்பாணம் நகர் பகுதியில் டியூஷன் பயில சென்று வந்த மாணவியை மருத்துவக்கல்லூரி மாணவன் என்று நாடகக்காதலால் சிறுமியை ஏமாற்றியுள்ளான். இதன்பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதனை வீடியோ காட்சியாக பதிவு செய்து பல முறை கட்டாய பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளான். இதுமட்டுமல்லாது காதலன் என்ற போர்வையில் இருந்த காமுகன் தனது நண்பர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளான். கல்லூரியில் பயின்று வந்த கொடூர மாணவன் ஒருவன் சுய இன்பம் கண்டதை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து, பெண்ணிற்கு அனுப்பியுள்ளான். இதன்பின்னர் குறித்த மாணவியையும் சுயஇன்பம் காணவேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதற்கு முன்னதாக பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இந்த தற்கொலைக்கு விசாரணைக்கு பின்னர் இது போன்ற கொடூரன்கள் வெளிவந்தது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அலைபேசி எண்கள் மற்றும் உரையாடல்கள் தொடர்பான விபரத்தை பெற அலைபேசி நிறுவனங்களின் உதவியை காவல் துறையினர் பெறவேண்டி இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி தொழில்நுட்ப பிரிவின் கீழ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யார்? இவர்களுக்கு பின்புலம் ஏதும் உள்ளதா? என்பது தொடர்பான தகவலும் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in srilanka yalpanam college girls raging sexual abuse suicide case investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->