அதிவேகத்தில் பாய்ந்த ரோலர்கோஸ்டரில்., தவறி பறந்த அலைபேசி.! வாலிபர் சட்டென எடுத்த முடிவு..!! வைரலான வீடியோ உள்ளே..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறான ஆச்சரியமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். இந்த விசித்திரமான நிகழ்வுகளை நமக்கு நேரில் காண்பிக்கும் இணையம் பெரும் உதவியை செய்கிறது. 

நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வினை பெரும்பாலும் நாம் வீடியோ காட்சிகளாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில்., சுற்றுலா செல்லும் நேரங்களில்., சுற்றுலா நினைவுகளை நாம் மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில்., சுற்றுலா குறும்புகளை பதிவு செய்வது வழக்கம். 

social media, இணையதளம், இணைய செயலிகள்,

இதனைப்போன்று பல எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் நாம் படமாக்கும் சமயத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ள ஆச்சர்யம் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. சுமார் 130 கிமீ வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் ரோலர்கோஸ்டாரில் தவறி விழுந்த அலைபேசியை வாலிபர் கையில் பிடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பொதுவாக ரோலர்கோஸ்டர் பயணத்தின் போது சிலர் உடல் உபாதைகள் மற்றும் பயத்தின் காரணமாக வாந்திகள் எடுத்து பறந்ததையும்., பின்னால் அமர்ந்திருக்கும் நபரின் முகம் வாந்தியால் நிறைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கும். இந்த நிலையில்., பறந்த அலைபேசியை கைகளால் பிடித்த வாலிபருக்கு பெரும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

நியூசிலாந்து நாட்டினை சார்ந்தவர் சாமுவேல் கெம்ப். இவர் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்று வர முடிவு செய்து., ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ரோலர்கோஸ்டரில் பயணம் செய்ய முடிவு செய்த சாமுவேல்., ரோலர்கோஸ்டரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.  

ரோலர்கோஸ்டர் சுமார் 130 கிமீ வேகத்தில் இயங்கிய சமயத்தில்., ரோலர்கோஸ்டரில் பயணம் செய்த பயணியொருவர் தனது அலைபேசியை தவறி விட்டுள்ளார். இதனையடுத்து இந்த அலைபேசி சாமுவேலின் இருக்கைக்கு அருகில் வரும் போது எதிர்பாராத விதமாக., கன கச்சிதமாகவும் தனது கைகளினால் பிடித்துள்ளார். இந்த ஆச்சர்யமான விடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Spain country roller coaster man caught mobile phone in 130 km speed


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal