பாலியல் வன்கொடுமையால் மன உளைச்சல்; கருணைக் கொலைக்கு அனுமதி கேட்ட இளம்பெண்; நீதிமன்ற உத்தரவால் பெற்றோர் சோகம்..!
In Spain a court grants permission for euthanasia to a woman suffering from severe psychological distress caused by sexual assault
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 25 பெண் நோலியா காஸ்டிலோ ராமோஸ் ஸ்பெயினின் புகழ்பெற்ற பர்சிலோனா நகரை சேர்ந்தவர். சிறுவயது முதலே இவர் மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அவரது பெற்றோர் இவரை ஒரு காப்பகத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு காப்பகத்தில் தங்கியிருந்தபோது அங்கு அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சல் அடைந்த இவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு இடுப்புக்கு கீழ் பக்கவாதம் ஏற்பட்டு உடல் செயலிழந்த நிலையில்,விபத்து காரணமாக ஏற்பட்ட உடல் வலியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தான் உடல் மற்றும் மன வேதனையோடு தொடர்ந்து உயிர் வாழ விரும்பவில்லை என்றும், தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஸ்பெயினில் கருணை கொலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், மகளின் கோரிக்கையை எதிர்த்து அவரின் தந்தை மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு இறுதியாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அந்தத் தனிநபருக்கே உண்டு என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், நோலியா அனுபவித்து வந்த தாங்க முடியாத உடல் மற்றும் மன ரீதியான வலியை கருத்தில் கொண்டு, அவர் சுயநினைவோடு எடுத்த இந்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறி, அவரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர், கருணை கொலை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வீரியமான மயக்க மருந்து செலுத்தப்பட்டு, அவர் வலியை உணரமுடியாத ஆழ்ந்த உறக்க நிலைக்குச் கொண்டுசெல்லப்பட்டார்.
அதன் பின்னர் அவரின் இதயத் துடிப்பு மற்றும் சுவாச மண்டலத்தைச் செயலிழக்கும் மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்ட நிலையில், உறக்க நிலையிலேயே நோலியா உயிரிழந்துள்ளார். அவர் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், நான் யாருக்கும் முன்மாதிரியாக இருக்க விரும்பவில்லை என்றும், அமைதியாக இந்த உலகை விட்டு போக விரும்புகிறேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
English Summary
In Spain a court grants permission for euthanasia to a woman suffering from severe psychological distress caused by sexual assault