இந்து இளம்பெண் கட்டாய மதமாற்றம் திருமணம்.. பாகிஸ்தானில் அரங்கேறும் கொடூரங்கள்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையிராக வசித்து வரும் இந்து மதத்தினை சார்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாயம் மதமாற்றம் செய்த பின்னர், முஸ்லீம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து வருகின்றனர். 

வருடத்திற்கு சுமார் 12 வயதான சிறுமிகள் முதல் 28 வயதாகும் இளம்பெண்களை வரை 1000 பேர் கடத்தப்பட்டு, மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவதாக அமெரிக்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த சில மாதங்களாக இது தொடர்ந்து வருவதாகவும், இந்து மக்கள் அதிகளவு வளம் வரும் சிந்து மாகாணத்தில் இது தொடர்கதையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிந்து மாகாணத்தில் கடந்த 14 ஆம் தேதியன்று உமர் கிராமத்தை சார்ந்த சாந்தி மேக்வாத் மற்றும் சார்மி மேக்வாத் ஆகிய இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எச்சரிக்கை மற்றும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்த விஷயத்தில் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் தனியாமல் இருந்து வரும் நிலையில், மாத்திரி மாவட்டத்தினை சார்ந்த பாரதி பாய் (வயது 24) என்ற இளம்பெண்ணிற்கு இந்து இளைஞரோடு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண மண்டபத்தில் காத்திருந்தனர். 

இந்த நேரத்தில் வருகை தந்த மர்ம கும்பல் பாரதியை கடத்தி சென்றதை அடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாரதி மாயமான சில மணிநேரத்திற்கு உள்ளாகவே, அவர் ஷாருக் குல் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டதாகவும், மதம் மாறியுள்ளதாகவும் உள்ள சான்றிதழ் இணையத்தில் வைரலானது. 

மேலும், இந்த சான்றிதழில் பாரதி கடந்த மாதத்தின் துவக்கத்திலேயே மதம் மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவரது பெயரும் புஸ்ரா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் போலியானது என்றும், மகள் வலுக்கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Pakistan Hindu girl kidnapped and marriages by Muslim


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->