ஐயாடியோவ்... ஊரடங்கு காலத்திற்கு பின் 51% அந்த நோய்கள் அதிகரிப்பு...! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்திற்கு பின்னர், இங்கிலாந்தில் பால்வினை தொற்றுநோய்கள் அதிகரித்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் ஊரடங்குகள் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்த நாட்களில், பெரும்பாலானோர் தம்பதிகள், பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் பலரும் பாலியல் தீண்டலின் போது பாதுகாப்பு கருதி கண்டம் போன்ற நோய்தொற்று தவிர்ப்பான்களை அணியாத காரணத்தால் பால்வினை தொற்றுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, கடந்த மார்ச் மாதம் 2020 ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பின்னர், STD (Sexually Transmitted Diseases) என்ற பால்வினை தொற்றுநோய்கள் 51 % அதிகரித்துள்ளதாக முடிவுகள் வந்துள்ளன. மேலும், கருத்தடைக்கான ஆர்வம் அன்றைய நாட்களில் 41 % கூகுள் இணையத்திலும் தேடப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலியா நாட்டில் சைபிள்ஸ் (Syphilis) என்ற பாக்டீரியா ரீதியிலான பால்வினைத்தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த பிரச்சனை இங்கிலாந்திலும் ஏற்பட்டுள்ளது. சைபிள்ஸ் என்பது பால்வினை பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, இது வலியற்ற புண்ணாகத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் குறித்து மருத்துவ இயக்குனர் ஹசைன் அப்டேத் தெரிவிக்கையில், " கடந்த வருடத்தில் இங்கிலாந்து முழுவதும் பால்வினை தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளது. பால்வினை நோய்கள் 51 % அதிகரித்துள்ள நிலையில், 41 % மக்களே அதற்கான மருந்துகளை நாட விரும்புகின்றனர். இங்கிலாந்தில் உள்ள பலருக்கும் சைபிள்ஸ் தொற்று இருப்பதே தெரியவில்லை. சைபிள்ஸ் பெரும்பாலும் அறிகுறி இல்லாமல் பரவும். அதனால் பலருக்கும் அவை தெரியவும் இல்லை. 

அதனை தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், சில வாரங்களில் அதனை குணப்படுத்திவிடலாம். ஆனால், நோய் முற்றும் நிலைக்கு சென்றால் உயிரிழப்புகளும் ஏற்படலாம். சைபிள்ஸ் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும். பாலியல் நோய்குறித்த சந்தேகம் அல்லது அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து சோதனை செய்துகொள்வது நல்லது. 

தாம்பத்தியம் மேற்கொள்ள விரும்புவார்கள் பாதுகாப்பான தாம்பத்தியத்தை செய்வது நல்லது. ஆணுறை இல்லாமல் தாம்பத்தியம் மேற்கொண்டால், நீங்கள் ஏற்கனவே STD காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், தோல் மூலம் தோல் என்ற விதியின் அடிப்படையில் பரவும் சைபிள்ஸ் எளிதில் அனைவருக்கும் பரவும். பாலியல் தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களின் வாடிக்கையாளருக்கோ இந்நோய் இருக்கும் பட்சத்தில், அது பெரும் விபரீதத்தில் கொண்டு சேர்த்துவிடும்.

ஊரடங்கு காலங்களில் பாலியல் செயல்பாடுகள் கட்டுக்கடங்காத வகையில் நடந்துள்ளதை இவை உணர்த்தினாலும், அவர்கள் பாதுகாப்பாக இருந்திருந்தால் அல்லது பாதுகாப்பான தாம்பத்தியத்தை மேற்கொண்டு இருந்தால் நோய்தொற்று பரவல் விகிதம் 51 விழுக்காடு அதிகரித்து இருக்காது" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In England After Corona 2020 Lockdown Period Now STI and Syphilis Disease Increased 19 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->