சாலையில் கட்டுக்கட்டாக பணத்தை வாரியிறைத்து சென்ற லாரி.! கையில் எடுத்த மக்களுக்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளின் விசித்திரத்தால் அதிகளவு நம்மை ஈர்க்கவும்., அந்த விசித்திர நிகழ்வை எண்ணி நாம் சிந்தித்து சிரிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

அமெரிக்க நாட்டில் உள்ள ஜியார்ஜியா நகரில் உள்ள அஸ்ஹபோர்ட் டுன்வுட்டி சாலையில் பணத்தை ஏற்றுக்கொண்ட லாரியானது சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியின் காதவானது சரியாக பூட்டப்படாமல் இருந்ததுள்ளது தெரியவந்தது. 

இதன் காரணமாக லாரியில் உள்ள பணங்கள் கொட்ட தொடங்கிய நிலையில்., மொத்தமாக சுமார் 1 இலட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் கீழே விழுந்துள்ளது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் இருந்த பணத்தை வேகமாக சென்று எடுத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

இது தொடர்பான காட்சிகளானது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான நிலையில்., இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., பணத்தில் உள்ள மதிப்பு எண்கள் அனைத்தும் எங்களுக்கு தெரியும்., ஆகையால் நீங்கள் முன்வந்து பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல... பணம் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் இருந்தாலும்., பின்னாலேயே காவல் துறையினர் விரட்டி வருவது பெரும் சோகமே.. என்று நல்ல வழியில் உழைத்து வாழ வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் இதுதான்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america money transfer lorry sprayed money due to incorrectly locked lorry door


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal