நெல்லை மண்ணில் இருந்து வந்து, அமெரிக்காவில் முதல் முறையாக நீதிபதியான தமிழர்...!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக இருப்பது, கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகும். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்கா வாழ் தமிழர் திரு.ஸ்ரீ.சீனிவாசன் (வயது 52) நியாயம் செய்யப்பட்டுள்ளார். 

இவரது முழுமையான பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஆகும். இவரது தந்தையான பத்பநாபன் சீனிவாசனிற்கு சொந்த ஊராக திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மேல திருவேங்கடம் இருந்துள்ளது. 

இவர் அமெரிக்கா நாட்டில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்து வந்த நிலையில், தாயார் சரோஜா இதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த 1960 ஆம் வருடத்திலேயே இவர்களின் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகரில் பிறந்துள்ளார். பின்னர் அங்கேயே உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றும், இதே பல்கலைக்ககத்தில் சட்டத்திற்கான பட்டமும் பெற்றுள்ளார். இதன்பின்னர் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.  

அமெரிக்காவின் அப்பீல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹார்வி வில்கின்சனிடம் முதலில் குமாஸ்தாவாக ஸ்ரீனிவாசன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் முதன்மை துணை அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்துள்ளார். பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தெற்கு ஆசிய நாட்டில் இருந்து வந்து, அமெரிக்காவின் அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இவரே முதல் நபராக பொறுப்பேற்றுள்ளார் என்பதும், தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in america first judge of tamilan his native in thirunelveli


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->