இந்திய மாணவர் அபிஷேக் கொலைவழக்கில் குற்றவாளி பகீர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருக்கும் குவேம்புநகர் பகுதியை சார்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட் (வயது 25). இவர் அங்குள்ள மைசூர் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த நிலையில்., இவரின் மேல்படிப்பிற்காக அமெரிக்கவிற்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் கான்பெர்னாக்பிகோவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இவர் அங்கு பயின்று வரும் நேரத்திலேயே பகுதி நேரமாக உணவக விடுதியில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற பின்னர் உணவகத்திற்கு திரும்பி பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில்., மர்ம நபரொருவர் அபிஷேக்கை சுட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு., மைசூரில் இருக்கும் அபிஷேக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., சகோதரரின் உடலை பெற அபிஷேக்கின் சகோதரர் அமெரிக்க செல்லவுள்ள நிலையில்., அபிஷேக்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளார். இந்த நிலையில்., அபிஷேக்கை சுட்டு கொலை செய்த எரிக் யூனர் (வயது 42) என்ற நபர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள நிலையில்., தற்போது எரிகிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america abisek killed case police investigate culprit surrender


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal