கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் -இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே திட்டவட்டம்
I will not give up Katchatheevu Sri Lankan President Anura Kumara Dissanayake manifesto
இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே நேற்று (ஞாயிறு) 2 நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்தார். தனது பயணத்தின் போது, அவர் பல்வேறு முக்கிய இடங்களை பார்வையிட்டதோடு, வரலாற்றில் முதன்முறையாக கச்சத்தீவு சென்றது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிபர் திசாநாயகே முதலில் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகம் பார்வையிட்டார்.அங்கிருந்து நெடுந்தீவு சென்ற அவர், பின்னர் இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் இந்தியா – இலங்கை கடல்பகுதி நடுவே அமைந்துள்ள கச்சத்தீவு சென்றார்.
அங்கு கடற்கரையோர மர நிழலில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து, கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் வரலாற்றில் இதுவரை ஒரு அதிபரும் கச்சத்தீவுக்கு நேரில் சென்று பார்வையிட்டதில்லை. அந்த வகையில், தற்போதைய அதிபர் அனுரகுமார திசாநாயகே எடுத்த இந்தப் பயணம் மிக முக்கிய அரசியல் மற்றும் தூதரக நிகழ்வாக கருதப்படுகிறது.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில், திசாநாயகே, “கச்சத்தீவு இலங்கைக்கு உரியது; அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதனால், கச்சத்தீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மீனவர்களிடையே வலுவாக எழுந்து வருகிறது.
அதிபரின் இந்த விஜயம்,இலங்கை தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முயற்சியா?அல்லது, இந்தியா – இலங்கை உறவுகளை சோதனைக்கு உள்ளாக்கும் ஒரு சிக்னலா?என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
English Summary
I will not give up Katchatheevu Sri Lankan President Anura Kumara Dissanayake manifesto