ஒரே ராத்திரியில் 100 கோடியா? நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஒரே ராத்திரியில் 100 கோடியா? நடந்தது என்ன?

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித் தொழிலாளியான இவரது வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. இதனால், முகமதுவின் வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதைபார்த்த பின்பு தான் தனது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்தது.

இதையடுத்து வங்கி கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது குறித்து விசாரணைக்காக வருகிற 30ம் தேதிக்குள் ஆஜராகும்படி முகமதுவுக்கு தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக முகமது நசிருல்லா மண்டல் தெரிவித்ததாவது, "காவல் துறையினரிடம் இருந்து அழைப்பு வந்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை தானா? என்று நான் பலமுறை மறுபரிசீலனை செய்தேன். 

கணக்கு பரிவர்த்தனை குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்றேன். அங்கு, வங்கி கணக்கு முடக்குவதற்கு முன்பு ரூ.17 இருந்ததாக கூறப்பட்டது. வங்கி கணக்கில் வெறும் ரூ.17 வைத்திருந்த நிலையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundrad crores credited into daily worker account in west bengal


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->