பார்வையின்றி, காதுகேளாமல்... படித்து பட்டம் பெற்ற முதல் பெண் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


ஹெலன் கெல்லர்:

ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் ஆனி சலிவன் (Anna Sullivan) ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.

மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது. இதை தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (The Miracle Worker) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.

வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.

அகிலன்:

தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.

சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன.

தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

helen keller birthday 2020


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->